ஜெயங்கொண்டம் மே 10: அரியலூர் அருகே பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவனை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாழ்த்தினார். ஜெயங்கொண்டம் ஒன்றியம் குலோத்துங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த திமுக கிளை கழக அவைத்தலைவர் கனகராஜ் மகன் ஜனகன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில், மாணவனின் இல்லத்துக்கு சென்ற ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் மணிமாறன், ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கணேசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்ராஜ் மற்றும் கழக தோழர்கள் உடனிருந்தனர்
The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் appeared first on Dinakaran.