'பிளடி பெக்கர்' படத்தின் 3வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

2 months ago 12

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளடி பெக்கர்' . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. 'பிளடி பெக்கர்' படத்திற்கு தணிக்கை குழு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த படத்திலிருந்து 'பெக்கர் வாலா' எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் 3வது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 'பொன்மயமே' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

#ponmayame ❤️ a soulful third single from #BloodyBeggar from tmrw 6pm ❤️ @thinkmusicindia pic.twitter.com/6HdDMt8kmf

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) October 26, 2024
Read Entire Article