பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா

8 hours ago 2

மணிலா,

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இந்த விவகாரத்தால் அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இதில் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக இரு நாடுகளும் பிலிப்பைன்சில் கூட்டுப்போர் பயிற்சியை நடத்தி வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்க ராணுவம் முதன்முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Read Entire Article