மணிலா: பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மணிலாவிலும் அதன் அருகே இருக்கும் வேறு இரு நகரங்களிலும் காற்றின் வெப்பநிலை, ஈரப்பத அளவீடான வெப்பக் குறியீடு ஆபத்தான அளவை எட்டும் என அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. இந்த வெப்பச் சலனத்தால் நீர்ச்சத்துக் குறைபாடு, வெப்பத் தாக்குதல் போன்றவை மக்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் நிலையம் கூறியுள்ளது.
அதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் பகல் பொழுதில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்க்குமாறு அது தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பிலிப்பீன்சின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசியது. மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகளுக்காக வருவது தவிர்க்கப்பட்டது.
இதனால் மில்லியன் கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, மணிலாவில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
The post பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன appeared first on Dinakaran.