பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம் - 81 பேர் பலி

2 months ago 16

மணிலா,

பிலிப்பைன்சில் உருவான டிராமி புயல் அந்நாட்டின் பல மாகாணங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக அந்நாட்டின் இசபெலா, இபுகாவோ, படாகஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

புயல் காரணமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில், பிலிப்பைன்சில் வீசிய புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 41 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article