பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

1 month ago 5

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த, மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

2024-25ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலநல இயக்ககம், சென்னை – 5 மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றுகளுடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து பிற்படுத்தபபட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக ஆணையர், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியிலோ தொலைபேசி எண் 044 – 29515942 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

அம்பேத்கர் விருது: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அறிய தொண்டாற்றி வருகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும் 26ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

The post பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article