பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனே ரத்துசெய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

5 hours ago 3


டெல்லி: பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனே ரத்துசெய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு ரூ.4 லட்சத்திற்கு கடத்தப்பட்ட குழந்தை விற்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த நிலையில், அதிகாரிகளின் கருணையற்ற அணுகுமுறையைக் கண்டித்த அமர்வு, நீங்கள் ஒரு மகனை விரும்பினாலும், கடத்தப்பட்ட குழந்தையை பெற முடியாது என்று கூறியது. குழந்தை கடத்தல் வழக்கை மோசமாக கையாண்டதாக உத்தரபிரதேச அரசு மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், நாடு தழுவிய அளவில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில்,

*உத்தரப்பிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் 13 பேருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய முன் ஜாமினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

*குழந்தை கடத்தல் வழக்கு, விசாரணைகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

*நிலுவையில் உள்ள விசாரணை தரவுகளைச் சேகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் நடவடிக்கைகளை விரைவுபடுத்த பொருத்தமான வழிமுறைகளை வழங்க இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.

*பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனே ரத்துசெய்ய வேண்டும்.

*பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண் மற்றும் |அவரது குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்த மருத்துவமனையின் முழு பொறுப்பாகும்.மேலும், இதில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

 

The post பிறந்த குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவமனை உரிமத்தை உடனே ரத்துசெய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article