
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் மோத உள்ளார்.