பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

5 hours ago 3

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.544 கோடியாகும். கடந்த ஆண்டை விட 5.21 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.24½ கோடியும், 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.75 லட்சத்தை அள்ளி விடலாம். இரட்டையர் பிரிவில் சாம்பியன் வெல்பவர்களுக்கு ரூ.5¾ கோடி பரிசாக கிடைக்கும்.

முதல் நாள் ஒற்றையர் ஆட்டங்கள் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Read Entire Article