பிரிஸ்பேன் டெஸ்ட்; இந்திய அணியில் இந்த மாற்றம் செய்ய வேண்டும் - புஜாரா

6 months ago 20

புதுடெல்லி,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பிரிஸ்பேனில் நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கை ஆழப்படுத்த அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாட வேண்டும் என புஜாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அடுத்த போட்டியில் ஒரு மாற்றம் மட்டுமே நிகழும் என்று நான் கருதுகிறேன். பேட்டிங் நன்றாக இல்லாததால் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் வருவார்.

ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக யாராவது விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு என்னுடைய பதில் இல்லை என்பதுதான். ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தீர்கள். அவரும் அந்த வாய்ப்பில் அசத்தினார்.

அவர் நல்ல பவுலர். எனவே நீங்கள் ஒரு மோசமான போட்டியை வைத்து அவரை நீக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை அடுத்த போட்டியில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக அஸ்வினுக்கு பதில் சுந்தர் விளையாடும் ஒரு மாற்றம் மட்டுமே சரியானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article