பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு ? - வெளியான தகவல்

6 months ago 26

திருவனந்தபுரம்,

கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிருகிறார். இதற்காக வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் போது பிரியங்கா காந்தி சொத்து மதிப்பு குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதன்படி, பிரியங்கா காந்தி தனக்கு 12 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அதேவேளை, அவரது கணவர் ராபர்ட் வதோராவுக்கு 65 கோடி ரூபாய் சொத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இருவருக்கும் சேர்த்து 77 கோடி ரூபாய் சொத்து உள்ளதாகவும், 10 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article