பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி அதிபர் புதினுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில் அந்நாட்டின் கசானில் நடைபெறுகிறது. அதிபர் புதினின் அழைப்பை ஏற்று ரஷ்யா சென்ற பிரதமருக்கு கசான் விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து, ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப்பேசிய பிரதமர், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர், தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வுக்காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.