புதுடெல்லி,
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷியாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷியாவின் உள்ள காசான் பகுதியில் வரும் இன்றும் நாளையும் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இந்த மநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தனது ரஷிய பயணம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-ர் புதின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறேன். 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறேன்.
உருவான பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.எனது கசான் பயணம் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.