
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நேற்று காலையில் அனுமந்த வாகன சேவையும், இரவில் கஜ வாகன சேவையும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7-ம் நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவைக்கு முன்னால் கலைஞர்கள் கோலாட்டம், குழு ஆட்டம், பரத நாட்டியம் ஆடினர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை செயல் அதிகாரி நாகரத்னா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 9.15 மணியளவில் தேர் புறப்படும்.