பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை வணங்குகிறேன்: சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி கமல்ஹாசன் பெருமிதம்

3 months ago 18

சென்னை: பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை வணங்குகிறேன் என சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் நடிப்பு என்றாலே சிவாஜி கணேசன் தான். அத்தகைய சிறப்புகளை கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்தநாள். இதனையொட்டி திரை பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது அனுபவங்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை வணங்குகிறேன்: சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி கமல்ஹாசன் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article