பிரபு தேவா நடித்த 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு

6 months ago 14

சென்னை,

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான 'பொய்க்கால் குதிரை, பாகீரா, பேட்ட ராப்' ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனை தொடர்ந்து விஜய்யின் 'கோட்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சக்தி சிதம்பரம் இயக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் தற்போது பிரபுதேவா நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைக்க கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தினை ட்ரான்ஸ் இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா குரலில் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் 'போலீஸ் காரனை கட்டிகிட்டா' பாடல் வெளியாகி வைரலானது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு இது 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் கடந்த நவம்பர் 22ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Date kurichachu sirika neenga ready ah?#Jollyogymkhana premieres from Dec 30th on namma @ahatamil pic.twitter.com/RL5Pv47w7R

— aha Tamil (@ahatamil) December 27, 2024
Read Entire Article