பிரபாஸுடன் மீண்டும் இணையும் திஷா பதானி?

1 month ago 7

ஐதராபாத்,

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சீதா ராமம் . இந்த வெற்றிப்பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் தனது அடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார். இது இவரது அறிமுக படமாகும். இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு கதாநாயகியை சேர்க்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி, திஷா பதானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1,000 கோடிக்கு வசூலித்த கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸுடன் திஷா பதானி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article