பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடம்?

3 months ago 24

மும்பை,

இந்தியாவின் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் (86) உடல்நிலை கவலைகிடமானநிலையில் இருப்பதாகவும், மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள தகவல்படி, தற்போது ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை 2 வகையான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரத்தன் டாடாவுக்கு எந்த மாதிரியான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது? எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது? என்பது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக நேற்று முன்தினமும் ரத்தன் டாடா உடல்நலம் குறித்த ஒரு தகவல் வெளியானது. அதில் ரத்தன் டாடாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை ரத்தன் டாடா முற்றிலுமாக மறுத்தார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த சூழலில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read Entire Article