பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணி; அடையாறு, பெருங்குடி பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்: வாரியம் தகவல்

1 week ago 3

சென்னை, நவ.6: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரை சாலை 6 வழிப்பாதையாக மாற்றப்படுவதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் விஜிபி வளாகம் எதிரில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட திருவான்மியூர், பெசன்ட் நகர், கலாசேத்ரா காலனி,

இந்திரா நகர் ஆகிய பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் ஆகிய பகுதிகளிலும், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை மற்றும் வெட்டுவாங்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றலாம்.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

The post பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணி; அடையாறு, பெருங்குடி பகுதிகளில் 2 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்: வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article