பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் - ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்

4 months ago 13
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார். முதலீடு தொடர்பாக, மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். நாட்டின் நலனுக்காகவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் ஸ்திரத்தன்மையை உருவாக்க இந்திய அரசு தீர்க்கமாகவும், கூடுதல் கவனத்துடனும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்கத் தேவையான சாதகமான சூழலை மோடி தலைமையிலான அரசு உருவாக்கியிருப்பதாக புதின் குறிப்பிட்டார். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்றும், பல ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
Read Entire Article