பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 days ago 5

சென்னை,

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்; ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை; இது வேதனை அளிக்கிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்கவும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை. பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத பிரதமரின் இலங்கை பயணம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று கூறினார்.

தொடர்ந்து மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு:-

* தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன் பிடி துறைமுகம்.

* பாசி வளர்த்தல் உள்ளிட்டவற்றில் பயிற்சி வழங்க 7,000 பயனாளிகளுக்கு ரூ.52.33 கோடியில் சிறப்புத் திட்டம்.

* 15,300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்ப கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்ய பயிற்சி வழங்குதல்.

* காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.

* வலைப்பின்னுதல், படகு கட்டுமானத் தொழில், கருவாடு தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி ஆகிய தொழில்கள் செய்ய ரூ.54 கோடியில் 20,100 மீனவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்"

* மீன் மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயிற்சி வழங்க ரூ.20 கோடியில் திட்டம்.

* ரூ.60 கோடியில் பாம்பன் மீன்பிடித் துறைமுக பணிகள் நடைபெறும்.

* மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மன்னார் வளைகுடா பகுதியில் சிறப்பு திட்டம்

* இந்த திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உறுவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் அறிவித்தார்.

Read Entire Article