புதுடெல்லி,
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பெண் எம்.பி. ஆக இருப்பவர் லவ்லி ஆனந்த். இவர் நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது, பிரதமர் மோடி மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியை பாராட்டினார்.
இருவரின் கூட்டாண்மையில் நாடும், பீகார் மாநிலமும் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாக கூறினார். மேலும் அவர்களின் ஆட்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இருவருக்கும் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.