
பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்கிறார்.பிரதமர் மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
அந்த பயணத்தை அவர் நேற்று தொடங்கினார். டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், அவர் கானா சென்றடைந்தார்.கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில் அவர் சென்றுள்ளார். கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் பிரதமர் மோடியை அதிபர் ஜான் டிரமனி மஹாமா கைக்குலுக்கி வரவேற்றார். கானாவி பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆபிஸ் ஆட் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் தர்மனி மஹாவாவிடம் இருந்து இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.