பிரதமர் மோடிக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது - ராகுல் தாக்கு

5 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலம் நந்தூர்பார் பகுதியில் தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பச் சட்டத்தை படித்திருக்கமாட்டார். அதனால், அவருக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது. அரசியலமைப்புப் புத்தகம் வெறுமையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகால சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது.

இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்குத் (நரேந்திர மோடி) தெரியாது. அதனால்தான் இதனை வெற்றுப் புத்தகம் என்கிறார். ராகுல் சிவப்பு புத்தகத்தை காண்பிப்பதாக மோடி பேசுகிறார்.இது எந்த வண்ணத்தில் உள்ளது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். இது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராகவுள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி 25 பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் கடன்களை அவர் தள்ளுபடி செய்யவில்லை. மணிப்பூர் மாநிலம் ஒரு ஆண்டுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டார்.

காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் மாதாந்திர நிதி உதவி, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article