பிரதமர் மோடி வருகை....ராமேஸ்வரத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு ஆய்வு

23 hours ago 2

ராமேஸ்வரம்,

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.இதேபோல, பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

இந்த நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் .ஹெலிபேட் இறங்குதளம், பாம்பன் பாலம், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு மேற்கொள்கின்ற்னர் . 

Read Entire Article