
டெல்லி,
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா செல்கிறார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம், மூதலீடு , மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.