பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

1 week ago 3

மும்பை: பிரதமர் மோடி ஒரு போராளி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த்; “பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ஃபைட்டர், அவர் எந்த ஒரு சவாலை எதிர்கொள்வார். 10 ஆண்டுகளாக இந்தியா மற்றும் உலக அளவில் அவர் அதனை நிரூபித்துள்ளார். பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்ற தாக்குதல் நடந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி சரியான பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது . காஷ்மீர் நிலைமையை பிரதமர் தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். அவர் காஷ்மீரில் அமைதியையும், நம் நாட்டிற்குப் பெருமையையும் கொண்டு வருவார். வாழ்வில் பல்வேறு சவால்களை தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று கூறினார்.

 

 

The post பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article