பிரதம மந்திரி சூரிய வீடு இலவச திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

4 hours ago 2

 

நாகப்பட்டினம்,நவ.23: பிரதம மந்திரி சூரிய வீடு இலவச திட்டத்தில் பயன் பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. 1 கிலோ வாட் ரூ.30 ஆயிரம்-, 2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம்-, 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும் இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பங்களை www.pmsuryaghar.gov.in என்ற இணைய தளத்தில் ஒருமுறையில் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post பிரதம மந்திரி சூரிய வீடு இலவச திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article