
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர், 'வார் 2' படத்தையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்காலிகமாக 'என்டிஆர் 31' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு ஜூன் 25ல் வெளியாகும் இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.