பிப்ரவரி மாத இறுதியில் தென் மாவட்டங்களில் மழை

3 months ago 9


சென்னை: தென் அரைக்கோளத்தில் நில நடுக்கோட்டுக்கு கீழே கடந்த வாரம் முதல் நிலை கொண்டுள்ள இரண்டு காற்று சுழற்சியில் ஒன்று சூப்பர் புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இதனால் கிழக்கு பகுதியில் இருந்து வீசும் காற்றை இது கட்டுப்படுத்தும் தன்மையுடன் நிலை ெகாண்டுள்ளது. அதனால் வடக்கு நோக்கி அதாவது தமிழகம் நோக்கிவர வேண்டிய காற்று தடைபட்டுள்ளது. இந்த காற்று தடை நீங்கினால் தான் தென் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் 96.8 டிகிரி பகல் நேரத்தில் வெயில் இருக்கும்.

இரவில் குறைந்த வெப்பநிலை இருக்கும் இரண்டுக்கும் இடையே 19 டிகிரி செல்சியஸ் வித்தியாசம் இருக்கும். 12, 13, 14ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கரு மேகம் சூழ்ந்து மழை பெய்வதற்கான சூழல் உருவாகும். ஆனால் மழை பெய்யாது. இந்த மாத இறுதி வா்ரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பிப்ரவரி மாத இறுதியில் தென் மாவட்டங்களில் மழை appeared first on Dinakaran.

Read Entire Article