பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு..!!

3 months ago 18

பிகார்: பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் மது விளக்கு அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராயம் காசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் சிவான் மற்றும் சரண் பகுதியில் பலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதை தொடர்ந்து நேற்று இரவு 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆக உயர்ந்துள்ளது. சிவான் மற்றும் சரண் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற விருந்து நிகழ்வில் கள்ளச்சாராயம் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கண்பார்வை இழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிகார் அரசானது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கள்ளச்சாராயம் எங்கு காசப்பட்டது, யாரால் விநியோகம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை சேகரித்து வருகிறது.

 

The post பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article