பிஎம்டபிள்யூ நிறுவனம் பிஎம்டபிள்யூ இசட்4 எம்40ஐ பியூர் இம்பல்ஸ் எடிஷன்காரை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. பிஎம்டபிள்யூ இசட்4 எம் பர்மாபென்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும், முதல் முறையாக மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகிறது. இதில் 3வது தலைமுறை 3 லிட்டர் 6 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4.6 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் யூனிட் இடம் பெற்றிருக்கும்.
புரோசன் டீல் கிரீன் மற்றும் சான்ரெமா கிரீன் என்ற புதிய 2 வண்ணங்களில் இந்த கார் கிடைக்கும். செங்குத்தான எல்இடி ஹெட்லைட்டுகள், பின்புறம் எல் வடிவ எல்இடி லைட்டுகள் இடம் பெற்றிருக்கும். சாப்ட் டாப் இடம் பெற்றுள்ளது. இதனை எலக்ட்ரிக் மூலம் 10 நொடிகளில் திறந்து கொள்ள முடியும். 10.5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட், பார்க்கிங் அசிஸ்ட், டிரைவ் அசிஸ்ட் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.96.9 லட்சம்.
The post பிஎம்டபிள்யூ இசட்4 எம்40ஐ appeared first on Dinakaran.