பால்கனியில் குடிபோதையில் நிர்வாண போஸ் மன்னிப்பு கேட்டார் நடிகர் விநாயகன்

5 months ago 14

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். நகைச்சுவை, வில்லன், நாயகன் வேடங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவது நடிகர் விநாயகனின் வழக்கமாகும். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சி கலூரில் வசித்து வரும் அவர் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை ஆபாசமாகத் திட்டினார். மேலும் தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்தார். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் செய்யாததால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் நடிகர் விநாயகன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் கூறியது: சில சமயங்களில் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய தவறுக்கும், நெகட்டிவ் எனர்ஜிக்கும் நான் பொது சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

The post பால்கனியில் குடிபோதையில் நிர்வாண போஸ் மன்னிப்பு கேட்டார் நடிகர் விநாயகன் appeared first on Dinakaran.

Read Entire Article