பால் பண்ணை ஊழியர் தற்கொலை

3 days ago 2

கிருஷ்ணகிரி, நவ.22: கெலமங்கலம் அருகே, பொம்மதாதனூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(53). அங்குள்ள பால் பண்ணையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கடந்த 3 வருடத்திற்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். அதனால் தனியாக வசித்து வந்த பிரகாஷ், மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரகாஷின் மகன் ராகேஷ் வீட்டுக்கு வந்த போது, அங்கு பிரகாஷ் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கெலமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், விபத்தில் மனைவி இறந்த வேதனையில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பால் பண்ணை ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article