தேவையான பொருட்கள்:
பச்சரிசி- ஒரு டம்ளர்
தேங்காய்த் துருவல்- ஒரு டம்ளர்
பொடித்த வெல்லம் -ஒரு டம்ளர்
ஏலப்பொடி -ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் -ஒன்னரை டம்ளர்
கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு தலா -ஒரு டீஸ்பூன் ஊற வைத்தது.
செய்முறை:
அரிசியை நன்றாக ஊறவிட்டு களைந்து அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மாவை தனியாக எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அரைத்தமாவை போட்டு கெட்டியாக கிளறி ஆறிய உடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். கூடவே ஊறிய பருப்புகளையும் போட்டு வேகவிடவும். நன்கு வெந்தவுடன் எடுத்து வைத்த மாவை கரைத்து அதனுடன் கலந்து கொதிக்க விடவும். பிறகு வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்ததும் ஏலப்பொடி போட்டு காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். பருப்பு, பால், வெல்லக்கரைசலில் பால் கொழுக்கட்டை பார்ப்பதற்கு ரம்யமாகவும் பருகுவதற்கு சுவையாகவும் இருக்கும்.
The post பால் கொழுக்கட்டை appeared first on Dinakaran.