பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மகளிர் காவலர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களான பெண் காவல் பணியாளர்களுக்கு சுலபமான, நிர்ணயம் செய்யப்பட்ட பணி நேரம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். பேறு காலத்தில் இருக்கும் பெண் காவலர்கள் காக்கி நிற சேலை அணியும் போது, தோள்பட்டையில் அவர்களின் பதவியை குறிக்கும் பட்டையை அணிய அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பாலூட்டும் தாய்மார்களான பெண் காவல் பணியாளர்களுக்கு சுலபமான வேலை appeared first on Dinakaran.