பாலியல் வன்கொடுமை: கருவுற்ற 11 வயது சிறுமி - அதிரடி உத்தரவிட்ட ஐகோர்ட்டு

2 months ago 13

மும்பை,

பெண்கள் 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க கோர்ட்டில் அனுமதி பெறுவது கட்டாயம். 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்கும் போது பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் அதற்கு கோர்ட்டு அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 11 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் சர்மிளா தேஷ்முக், ஜித்தேந்திர ஜெயின் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், "பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர் ஒரு மைனர் பெண். எனவே அவரது கருவை கலைக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் பிறந்துவிட்டால் அதை மருத்துவமனை நிர்வாகம் காப்பாற்ற வேண்டும். அந்த குழந்தையை பெற்றோர் வளர்க்க விரும்பவில்லை எனில் அந்த குழந்தைக்கு மாநில அரசு தான் பொறுப்பு" என்றனர்.

மேலும் சிறுமிக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்காக அவரது ரத்த, சதை மாதிரியை சேகரித்து வைக்கவும் உத்தரவிட்டனர்.

Read Entire Article