பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

4 hours ago 3

நெல்லை: தூத்துக்குடியில் இருந்து பாலக்காட்டிற்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் முன்பதிவு பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். பாலக்காடு – நெல்லை இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் வெகுகாலமாக இயக்கப்பட்டு வந்தது. நெல்லையில் இருந்து செங்கோட்டை, புனலூர், கொல்லம், எர்ணாகுளம் வழியாக கேரளாவின் கடைசி எல்கையான பாலக்காடு செல்வோருக்கு இந்த ரயில் வசதியாக இருந்தது. இரவு நேரத்தில் இயக்கப்பட்ட இந்த ரயிலில் நல்ல கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்கிற பயணிகளின் ேகாரிக்கையை ஏற்று இந்த ரயில் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு நீட்டிக்கப்பட்டது.

பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது 18 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் அதிக முன்பதிவற்ற பெட்டிகள் இருப்பதால், முன்பதிவுகள் விரைவில் முடிந்து விடுகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரளாவின் வெகு தொலைவு தூரத்திற்கு பயணிப்பவர்கள், முன்பதிவு பெட்டிகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். மேலும் தொலை தூர பயணங்களுக்கு முன்பதிவற்ற பெட்டிகளை விட, முன்பதிவு பெட்டிகளே வசதியாக இருப்பதால், அந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் கூறுகையில், ‘‘தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரசில் மொத்தம் 18 பெட்டிகள் உள்ளன. இதில் 11 பெட்டிகள் முன்பதிவற்ற பொதுப்பெட்டிகளாக உள்ளன. 5 ஸ்லிப்பர் பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் அதில் உள்ளன. முன்பதிவற்ற பெட்டிகள் குறைவாக இருப்பதால், 2 முன்பதிவற்ற பெட்டிகளை நீக்கிவிட்டு, ஒரு ஸ்லிப்பர் பெட்டி மற்றும் ஒரு 3 அடுக்கு ஏசி பெட்டி இணைத்திட தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். கோடை கால விடுமுறையில் கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் செல்வோர் இதனால் பயன் பெறுவர்.’’ என்றார்.

The post பாலருவி எக்ஸ்பிரசில் கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைக்கப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article