பாலக்காடு தாலுகா அமைப்பின் 70வது ஆண்டுவிழாவை முன்னிட்டு மார்கழி மாத திருவாதிரை நாட்டியம்

2 weeks ago 3

 

பாலக்காடு, ஜன. 14: நாயர் சர்வீஸ் சொசைட்டி பாலக்காடு தாலுகா அமைப்பின் 70வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பாலக்காடு கோட்டை மைதானத்தில் மார்கழி மாத மெகா திருவாதிரை நாட்டியம் அரங்கேற்றம் நேற்று நடைபெற்றது.
இந்த திருவாதிரை நடனத்தில் 1770 மகளிர் நடனமாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர். பாலக்காடு தாலுகா அமைப்பு தலைவர் வக்கீல் மேனன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணகுமார், எம்.பி., கண்டன், எம்.எல்.ஏ., ராகுல், நகராட்சி தலைவர் பிரமீளா சசிதரன், துணைத்தலைவர் வக்கீல். கிருஷ்ணதாஸ், என்எஸ்எஸ் போர்டு உறுப்பினர் நாராயணன், ஆலத்தூர் அமைப்பு தலைவர் சணல்குமார், அமைப்பு நிர்வாகிகள் நடராஜன், குமார், பாபு சுரேஷ், சுகேஷ் மேனன், சந்தோஷ்குமார், பேபி கலா, அனிதா சங்கர், மோகன்தாஸ், சிவானந்தன், ராஜேமோகன், கருணாகரன் உன்னி, அஜி, ராஜாகோபால், மணிகண்டன், உன்னிகிருஷ்ணன், நாராயணன்குட்டி, ஜெயராஜ், நளினி, வல்சலா, சதிமது, சுனிதா சிவதாஸ், பிரீத்தி உமேஷ், ராஜேஸ்வரி, ஸ்மிதா, விஜயகுமாரி வாசுதேவன் ஆகியோர் விழாவில் பங்கேற்று பேசினர்.

 

The post பாலக்காடு தாலுகா அமைப்பின் 70வது ஆண்டுவிழாவை முன்னிட்டு மார்கழி மாத திருவாதிரை நாட்டியம் appeared first on Dinakaran.

Read Entire Article