பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஹம்பெர்ட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

2 months ago 12

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ளவருமான ரஷிய வீரர் கரன் கச்சனோவ், உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் ஹம்பெர்ட் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹம்பெர்ட் 6-7 (6-8), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹம்பெர்ட் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) உடன் மோதுகிறார்.

Read Entire Article