பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட கேஸ்பர் ரூட்

2 months ago 11

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேஸ்பர் ரூட் 6-7 (3-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் ஜோர்டான் தாம்சனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற ஜோர்டான் தாம்சன் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் (2வது சுற்று) சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிலியின் அலெஜான்ட்ரோ டேபிலோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

Read Entire Article