மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) புராஜெக்ட் இன்ஜினீயர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 78
பணி:
I) கள செயல்பாட்டு பொறியாளர் (IT பாதுகாப்பு மற்றும் சொத்து மேலாளர்)-6
சம்பளம்: ரூ.80,000,
வயது: 45-க்குள் இருக்க வேண்டும்,
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ./பி.இ/பி.டெக் தேர்ச்சியுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.450.
II). பணி : கள இயக்க பொறியாளர்
அ) பிரிவு:டி.சி சப்போர்ட் (DC Support)-4
ஆ) : ஐ.டி (IT Support Staff)-37
சம்பளம்: ரூ.60,000,
வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஐ.டி/சி.எச்/இசிஇ/மின்னணுவியல் பிரிவில் பி.இ/பி.டெக் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.450
III). பணியின் பெயர்: திட்ட பொறியாளர் - I
அ) உள்ளடக்க எழுத்தாளர்(Content writer)-1
ஆ)ஐ.டி உதவி மைய ஊழியர்கள் (IT Help Desk Staff)-12
சம்பளம்: ரூ.40,000
வயது: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஐ.டி/சி.எச்/இசிஇ/மின்னணுவியல் பிரிவில் பி.இ/பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400
IV). பணியின்பெயர் : பயிற்சி பொறியாளர்-I (District Technical Support)-18
சம்பளம்: ரூ.30,000
வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஐ.டி/சி.எச்/இசிஇ/மின்னணுவியல் பிரிவில் பி.இ/பி.டெக் தேர்ச்சியுடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் - ரூ. 150.
வயது தளர்வு :
எஸ்சி/எஸ்டி (SC/ ST) பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள்
ஓபிசி (OBC) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைன் மூலம் எஸ்பிஐ (SBI)வங்கியில் செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் மற்றும் PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: http://bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடக்க தேதி:06.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.11.2024