புதுடெல்லி,
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்பு சீனி விசுவநாதனால் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் பாரதியாரின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக்காட்சி போன்ற விவரங்கள் உள்ளன.
இந்த தொகுப்பை டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிடுகிறார் என்று பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.