திருமலை: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்க்காபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியொட்டி கிராமத்தில் முட்புதரில் 100க்கும் மேற்பட்ட பாம்பு முட்டைகள் குவியல் குவியலாக இருப்பதாக கிராம மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் பாம்பு முட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவற்றை அட்டைபெட்டியில் சேகரித்து மணல் திட்டு பகுதியில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் சேகரிக்கப்பட்ட 120 முட்டைகளில் முதற்கட்டமாக நேற்று ஒரேநாளில் 80 முட்டைகள் பொரிந்து பாம்பு குட்டிகள் வெளியே வந்தன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், `பாம்புகள் என்றால் உடனே அச்சப்பட வேண்டியதில்லை. அவை பல்லுயிர் இனப்பெருக்கத்திற்கு பயனுள்ளவையாக உள்ளது. தற்போது பொரிந்த அனைத்து பாம்பு குட்டிகளும் நீர்நிலைகளில் வாழக்கூடிய விஷத்தன்மை அற்றவை. எனவே அவற்றை வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விடப்படும்’ என்றனர்.
The post பாம்பு முட்டையில் இருந்து வெளிவந்த 80 குட்டிகள்: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.