பாபா சித்திக் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது; மகாராஷ்டிரத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ராகுல் காந்தி

3 months ago 16

டெல்லி: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில், அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு தப்பினா். உடனடியாக அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு பாபா சித்திக் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாபா சித்திக் படுகொலைக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

“பாபா சித்திக் படுகொலை சம்பவம் மிகவும் துயரமானது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையே இந்த கொடூர சம்பவம் வெளிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா அரசுதான் இந்த படுகொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பாபா சித்திக்கை சுட்ட மூன்று பேரில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றன என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாபா சித்திக் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது; மகாராஷ்டிரத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Read Entire Article