பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

1 month ago 5

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, சலீப் ஜாபர், பூட்டோ மைதீன், சீனி முஹம்மது, செய்யது அஹமது, வழக்கறிஞர் நபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அப்போது, அபுபக்கர் சித்திக் பேசுகையில், ‘ஒன்றிய, மாநில அரசுகள், பாபர் மசூதிக்கு நிகழ்ந்த அநீதி போல, இனியொரு வழிபாட்டு தலத்துக்கு நிகழ்ந்திடாதவாறு, சமூக நல்லிணக்கத்தை காக்கும் வகையில், வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் (1991) செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், வழிபாட்டு தலங்கள் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கீழ்நீதிமன்றங்கள் விசாரிக்கவோ, வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கீழ்நீதிமன்றங்கள் உத்தரவிடவோ உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article