பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்திருந்தால் விமான சாகச நிகழ்ச்சியில் உயிர் பலியை தடுத்திருக்கலாம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

3 months ago 18

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி பயணியர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய விமானப்படை 92வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண, லட்சக்கணக்கான மக்கள் கூடினர். தேவையான வசதிகளை செய்து கொடுக்காத நிலையில், லட்சக்கணக்கானோர் மெரினா பீச்சில் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார். ஆத்தூர் தலைவாசல் பகுதியில், மிகப்பெரிய கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதற்காக தனி குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். அதனை சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வது சரியா? இதை ஏற்க மாட்டோம். சட்ட ரீதியாக சந்திப்போம். இவ்வாறு கூறினார்.

The post பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்திருந்தால் விமான சாகச நிகழ்ச்சியில் உயிர் பலியை தடுத்திருக்கலாம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article