நன்றி குங்குமம் தோழி
l வெட்டுக் காயத்திற்கு வசம்புத்தூளை அரைத்துப் பற்றுப் போட்டால் வெட்டுக்காயம் குணமாகும்.
l ஏலக்காயை பொடி செய்து தேனில் போட்டு குழப்பி எடுத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
l இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
l திப்பிலியை பொரித்து பொடி செய்து தேன் விட்டுக் குழப்பிச் சாப்பிட இருமல் குணமாகும்.
l மாதுளை இலைக் கொழுந்தை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
l கர்ப்பமான பெண்களுக்கு இடுப்பு வலித்தால் பாலில் மிளகுப் பொடியை போட்டுக் குடித்தால் இடுப்பு வலி தீரும்.
l அகத்திக் கீரையை அரைத்துக் காயங்களுக்கு பற்றுப் போட்டால் குணமாகும்.
l பச்சை கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் போகும்.
lஎருக்கம்பாலை விஷ ஜந்துக்களின் கடிவாயில் தடவினால் விஷம் உடலில் பரவாது.
l அதிமதுரத் தழையை மென்றால் இருமல் குணமாகும்.
l வெங்காயத்துடன் சில மிளகுகளை சேர்த்துச் சாப்பிட்டால் குரல் வளம் அதிகரிக்கும்.
தொகுப்பு: ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி.
The post பாட்டி வைத்தியம்! appeared first on Dinakaran.