"பாட்டல் ராதா" குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சி!

4 months ago 12

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் கடந்த 24-ந் தேதி வெளியானது. தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள 'பாட்டல் ராதா' படத்தை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். இப்படம் மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நெருங்கி வா முத்தமிடாதே' இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் அறிமுகமானவர் சஞ்சனா நட்ராஜன். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'இறுதி சுற்று' திரைப்படத்தில் பாக்சிங் மாணவிகளில் ஒருவராக நடித்தார். பின்னர் விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த 'நோட்டா ', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 போன்ற படங்களில் சஞ்சனா நடித்திருந்தாலும் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாத நடிகையாக மட்டுமே இருந்தார். இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்தான். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா விஜயன் நடித்திருந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார். கேம் ஓவர், ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி கவனம்பெற்ற 'பாட்டல் ராதா'  படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் சஞ்சனா நடராஜன் 'சமீபத்தில் வெளியான பாட்டல் ராதா படத்தினால் எனக்கு கிடைத்த மிகுதியான அன்புக்கும் பாராட்டும் நான் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். 'அஞ்சலம்' கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத பயணம். அழகாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்த இயக்குநருக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். இந்தச் சிறப்பான படத்தில் என்னையும் இணைத்ததற்கு தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித், அருண் பாலாஜிக்கு மிகப்பெரிய நன்றிகள். குருசோம சுந்தரம் உடன் திரையில் நடித்தது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. படம் முழுவதும் எனக்கு அளித்த அவரது ஆதரவுக்கு என் மனமார நன்றி. எனது நடிப்பைப் பாராட்டிய பத்திரிகைகள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. வருங்காலத்திலும் நல்ல கதைகளைக் கொண்ட தரமான திரைப்படங்களின் நடிக்க காத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

❤️#BottleRadha pic.twitter.com/EHQ0WoDskp

— Sanchana natarajan (@sanchana_n) February 6, 2025
Read Entire Article