பாஜவை கண்டிக்காமல் வலிக்காமல் வலியுறுத்திய பழனிசாமி கத்தி கத்தி பேசினால் போதாது, உண்மையைப் பேசுங்கள்: அமைச்சர் ரகுபதி டிவிட்

4 months ago 15

சென்னை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியதைப் போல ‘வாழைப்பழ காமெடியை’ போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி.

ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது. ஆட்சிக்காக பாஜவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜவை எதற்குமே கண்டிக்காமல் ‘வலிக்காமல் வலியுறுத்திவிட்டு’ மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post பாஜவை கண்டிக்காமல் வலிக்காமல் வலியுறுத்திய பழனிசாமி கத்தி கத்தி பேசினால் போதாது, உண்மையைப் பேசுங்கள்: அமைச்சர் ரகுபதி டிவிட் appeared first on Dinakaran.

Read Entire Article